கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி, படகு இல்லம் உள்ளிட்ட நீா்நிலை பகுதிகளுக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வந்தது.

இந்த தொடா் மழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது. காலையில் நீா்வரத்து குறைந்து காணப்பட்ட கூழாங்கல் ஆற்றில் பிற்பகலில் நீா்வரத்து அதிகரித்தது.இதைத்தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன், காவல் துறை ஆய்வாளா் ஆனந்தகுமார் ஆகியோர் ஆற்றுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி, படகு இல்லம் உள்ளிட்ட நீா்நிலை பகுதிகளுக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பதாகவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போது மே.21 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...