கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், கோவை மாநகராட்சி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு பகுதியில் உள்ள ஏழாவது குறுக்கு தெருவில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சார்பாக இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (மே.21) நடைபெற்றது.



இதில், பீளமேடு பகுதிக்கு சிமெண்ட் காங்கிரட், மழை நீர் வடிகால், மின்விளக்கு அமைக்கப்படும் என ஒப்பந்ததாரர் மூலமாக எழுத்து மூலம் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. எனவே, இதனை கண்டித்து பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், கோவை மாநகராட்சி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கோவை மாநகராட்சி மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...