தடாகம் அருகே சாரல் மழையில் நனைந்த படியே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகளின் வீடியோ வைரல்

மூலக்காடு மலை கிராமத்தில் ஊர் எல்லையில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் அருந்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் சாரல் மழையில் நனைந்த படியே காட்டுயானைகள் தண்ணீர் அருந்தின.

இந்த ஊரில் விலங்குகள், பறவைகள் தண்ணீர் அருந்துவதற்காக ஊர் எல்லையில் தண்ணீர் தொட்டி கட்டுப்பட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்படுவது வழக்கம்.



இந்நிலையில் இன்று அங்கு குட்டியானைகளுடன் வந்த 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றன.



இதனை அங்கிருந்தவர்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...