கோவை காந்தி பார்க் ரவுண்டானாவில் ராஜீவ் காந்தியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (மே.21) அனுசரிக்கப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.என். கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர் பச்சைமுத்து, கவுன்சிலர்கள், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் நவீன் குமார் மற்றும் வட்டார தலைவர்கள், டிவிசன் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ்சார், மகிலா காங்கிரஸ்சார் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...