பாப்பம்பட்டி இடையர்பாளையம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

பாப்பம்பட்டி-இடையர்பாளையம் ரோடு அருகே கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சூலூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஒழித்து, போதைப்பொருள் இல்லா கோவையை உருவாக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று (21.05.2024) சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் பாப்பம்பட்டி-இடையர்பாளையம் ரோடு அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சூலூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் கோபாலகிருஷ்ணன்(21) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...