கனமழையால் குளம் போலாக மாறிய கோவை ரயில்நிலையம் சாலை

கோவையில் கனமழை காரணமாக ரயில் நிலையம் சாலை நீரில் மூழ்கியது. வாகனங்களும் தண்ணீரில் ஊர்ந்து சென்றன, மக்கள் கடும் அவதி.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று (மே.21) மதியத்தில் இருந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 

இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் சாலையில் நீர் வழிந்து ஓடியது.



அதில் குறிப்பாக கோவை ரயில்நிலையம் செல்லும் சாலையில் மழை நீர் குளம் போல காட்சியளித்து வருகின்றது. 



மேலும் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் ஊர்ந்து செல்கின்றது. மழை நின்றாலும் தண்ணீர் வடியாமல் இந்த சாலை உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...