கோவையில் கல்லூரி பேராசிரியை தற்கொலை - காரணம் குறித்து பேரூர் போலீசார் விசாரணை

பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் கல்லூரி பேராசிரியை செலின் ரேச்சல் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து பேரூர் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் வசிப்பவர் திருச்செந்தூரைச் சார்ந்த விஜய் கிங்ஸ்லி(30). இவரது மனைவி செலின் ரேச்சல் (29). இவர் அரசாங்க கலை அறிவியல் கல்லூரியில் சி.எல்.பி. பிரிவில் பேராசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. தம்பதிகள் குழந்தை மற்றும் விஜயின் தாயார் உட்பட நான்கு பேர் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையிலே, விஜய்க்கு நேற்று காலை அலுவல் வேலையாக வெளியே சென்று விட்டார். பிற்பகல் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

பலமுறை தட்டியும் திறக்கவில்லை. குழந்தையின் அழுகுரல் சத்தம் மட்டும் கேட்டிருக்கின்றது. இதனால், காவல் நிலையம் வந்து தனது மனைவி வீட்டை பூட்டி விட்டு உள்ளே இருப்பதாக காவல் நிலையத்தில் வந்து புகார் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலர் கண்ணதாசன் சென்று கதவைத்திறந்து பொழுது, செலின் ரேச்சல் அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரேதத்தை கைப்பற்றி பேரூர் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...