கோவை அருகே ஊருக்குள் புகுந்த பாகுபலி - மூதாட்டி கூறியதை கேட்டு வனப்பகுதிக்கு சென்ற யானை

நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை, சுக்கு காபி கடை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அப்போது, கணேசா போய் விடு, விநாயகா போய் விடு என்று மூதாட்டி கூறியதை கேட்டு, அங்கிருந்து கல்லார் வனப்பகுதிக்கு சென்றது.


கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான மேட்டுப்பாளையம், நெல்லிமலை, வனப்பகுதியில் காட்டு வனச்சரகத்தில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள யானைகள் உணவு மற்றும் தன்ணீர் தேடி இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும், கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகள் வனப்பகுதியில் இடம்பெயர்ந்து செல்வது அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மே.21 நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை சமயபுரம் சாலையைக் கடந்து வழக்கமாக செல்ல கூடிய பாதையில் செல்லாமல் எதிர்பாராத விதமாக அருகே மக்கள் நடமாட்டம் உள்ள சுக்கு காபி கடை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.



அப்போது வீட்டின் முன் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு நடுவே பாகுபலி சென்றபோது கணேசா போய் விடு, விநாயகா போய் விடு என்று அருகில் இருந்த மூதாட்டியின் குரலுக்கு கட்டுப்பட்டு ஆடி அசைந்தபடி வாகனங்களை சேதப்படுத்தாமல் அங்கிருந்து வெளியேறி கல்லார் வனப்பகுதிக்கு சென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...