கோவை சுகுணாபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா - தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் இன்று சக்தி கரகம் மற்றும் தேர் பவனி நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தேர்பவனியை தொடங்கிவைத்தார். பின்னர் பக்தர்களுடன் அவர் உற்சாகமாக நடனமாடியவாறு ஊர்வலமாகச் சென்றார்.



கோவை: கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக இன்று ஸ்ரீ சக்தி கரகம், மற்றும் அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி இன்று நடைபெற்றது.



இந்த விழாவில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ, அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் பவனியை துவக்கி வைத்து, பக்தர்களுடன் உற்சாக நடனமாடியவாறு ஊர்வலமாக நடந்துசென்றார்.

திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு, உட்பட பாலக்காடு பிராதன சாலைவழியாக ஊர்வலமாக சென்றது. அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இளைஞர்களின் சிலம்பாட்டம் மற்றும் வான வேடிக்கை உடன் சுகுணாபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...