கோவை 86-வது வார்டு புள்ளுக்காடு பகுதியில் குடிநீர் பிரச்சனை - பகுதிமக்கள் திடீர் சாலை மறியல்

குடிநீர் பிரச்சனை பற்றி பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புல்லுக்காடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி 86-வது வார்டு புல்லுக்காடு பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளை பராமரிக்க வேண்டும் என்றும், குப்பைகளால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடை சரிசெய்ய வலியுறுத்தியும் பலமுறை கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வைத்த நிலையில், கடந்த பல நாட்களாக புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் குடிநீர் வினியோகமும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனால் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புள்ளுகாடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த கோவை உக்கடம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...