கோவையில் லாரி மீது மரம் சாய்ந்து விழுந்து விபத்து; இருவர் காயம்

கோவையில் கே.ஜி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே மரம் ஒன்று விழுந்து, தண்ணீர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவர் காயமடைந்து மீட்கப்பட்டனர்.


Coimbatore: கோவையில் இன்று மாலை பரவலாக மழை பொழிந்தது. தண்ணீர் தேங்கியதால் நகரின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதனிடையே, கோவை கே.ஜி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் உள்ள பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது விழுந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிக்கிக் கொண்டனர்.



தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரக்கிளைகளை அகற்றி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பத்திரமாக மீட்டனர். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.



மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதால், கே.ஜி தியேட்டர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...