பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக கோவை வரும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும் என்று தென்னகரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்-கோயம்புத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள வஞ்சிபாளையம் ரயில்வே யார்டில் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் (24.05.2024 & 26.05.2024) ஈரோடு-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஈங்கூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து ஈங்கூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்.

பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது. ரயில் எண்.18190 எர்ணாகுளம் ஜங்சன் - டாடாநகர் ஜங்சன் 28 & 30ம் தேதிகளில் வசதியான ஏதேனு ஒரு இடத்தில் 1 மணிநேரம் நிறுத்தி செல்லப்படும். ரயில் எண்.13352 ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் 28 & 30 தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...