கனமழையால் 94.50 அடியை எட்டிய பில்லூர் அணை - விரைவில் உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்ப்பு

100 அடி கொள்ளவு கொண்ட பில்லூர் அணை கனமழை காரணமாக தற்போது 94.50 அடியாக உயர்ந்துள்ளது. முழுகொள்ளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பில்லூர் அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து பில்லூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக கடந்த ஞாயிறு அன்று உயர்ந்தது. மழை தொடர்ந்தால் பில்லூர் அணை முழு கொள்ளளவு விரைவில் எட்டப்படும்.

இந்நிலையில் அணையில் நீரின் அளவு தற்போது (மே.22) 94.50 அடியில்உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணைக்கு வரும் உபரி நீர் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...