திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதியாக ரத்து

காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணியால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை மே 27, 29, 30 தேதிகளில் பகுதியாக ரத்து.


கோவை: காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் காட்பாடியை அடுத்துள்ள பொம்மசமுத்திரம் ரயில் நிலையத்தில் புதிய லூப் லைன் அமைக்கும் வகையில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே துறை நேற்று (22.5.2024) அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் எண்.22615 திருப்பதி - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 27.05.2024, 29.05.2024 & 30.05.2024 திருப்பதி - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு ரயில் இயக்கப்படாது; இது காட்பாடியில் இருந்து புறப்பட்டு, மேற்குறிப்பிட்ட தேதிகளில் கோவை வரை இயக்கப்படும்.

மேலும் (28.05.2024 & 30.05.2024) அன்று திரும்பும் கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்.22616) காட்பாடி திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; மேற்குறிப்பிட்ட தேதிகளில் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...