தென்னம்பாளையம் நால்ரோடு அருகே கஞ்சா விற்பனை செய்து மூன்று பேர் கைது

கோவையில் சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமிருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு நேற்று மே.22 ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தென்னம்பாளையம் நால்ரோடு அருகே காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். 

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாபுராஜ்(24), நாகராஜ் (22) மற்றும் திபுநாயக்(29) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...