கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக மெடி அப்டேட் கருத்தரங்கு - மருத்துவர்கள் பங்கேற்பு

கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலனை முன்னிட்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அறிந்துகொள்ள மெடி அப்டேட் கருத்தரங்குகள் உதவியாக இருக்கும் என்று கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.


கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக அன்னூர் வட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக "மெடி அப்டேட்" கருத்தரங்கை நடத்தியது. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் கேஎம்சிஹெச் மருத்துவமனை தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. இவற்றில் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில் தற்போது முதன்முறையாக கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னூரில் ஒரு மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.

கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்திய கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலனை முன்னிட்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அவர்கள் அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மருத்துவத் துறைகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. நோயாளிகளுக்கு தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை அளிப்பதற்கு மருத்துவர்கள் அவற்றைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகிறது என்றும், இதுபோன்ற கருத்தரங்குகள் மருத்துவர்கள் தங்கள் தொழில் திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு, சக மருத்துவர்களுடன் கலந்துரையாடவும் நல்வாய்ப்பாக அமைகின்றன என்று கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக கேஎம்சிஹெச் மருத்துவ இயக்குனரும், எலும்பு முறிவு ஆலோசகர் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் விமல்குமார் அனைவரையும் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற கோவில்பாளையம் மெடி அப்டேட் 2024 கருத்தரங்கில் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...