மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து - சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் சேவையை இன்று (மே.23) ஒரு நாள் ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மலை ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

பின்னர் ரயில் பாதையை சீரமைக்கும் பணி நிறைவு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்ததால் மீண்டும் நேற்று (22.5.24) மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது.



இதனால் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன.



மேலும் மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை இன்று (மே.23) ஒரு நாள் ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...