மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பவானி அம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பவானி அம்மன் கோவிலை சூழ்ந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (22.5.24) நிலவரப்படி அணையின் நீர் மட்ட உயரம் 94.50 அடியை எட்டியுள்ளது.

இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.



இதனால் பவானி ஆற்றின் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.



பவானி ஆற்று பாலம் அருகே கரையோர பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை இன்று மே.23 வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...