உடுமலை அருகே புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு புத்தம்மம் அறிவுத்திருக்கோவில் சிறப்பு வழிபாடு

பூர்ணிமா விழாவை முன்னிட்டு புத்தருக்கு அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு புனித நீர் ஆற்றுதல் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு சிறப்பு பிரார்த்தனை, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் புத்ததம்மம் அறிவுத் திருக்கோவிலில் கௌதம புத்தரின் 2586 ஆவது பிறந்தநாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் இறந்த நாள் மூன்றும் ஒரே நாளில் அமையும் புத்தபூர்ணா விழா இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

முன்னதாக பூர்ணிமா விழாவை முன்னிட்டு புத்தருக்கு அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு புனித நீர் ஆற்றுதல் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை,மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .

இந்தநிகழ்வில், மேல்மருவத்தூர் தலைமை குரு அசோகா புத்த விகார் பதானன்ட் நாகராஜ், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மௌரியர் புத்தர், செல்வரபுரம் திருக்கோவில் தலைமை குரு கௌதம காளியப்பன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் திருப்பதி, மடத்துக்குளம் ஒன்றியம் ஊடகப்பிரிவு நம்பி ராஜ் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



பிரார்த்தனை கூட்டத்தில் மேல்மருவத்தூர் தலைமை குரு அசோகா புத்த விகார் பேசும் பொழுது, அனைவரும் பூத்தரின் போதணைகளை பின்பற்ற வேண்டும், குறிப்பாக அனைத்துதர மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நல்லதை செய்ய வேண்டும், கெட்டதை செய்ய கூடாது, மனதை தூய்மை படுத்தபட வேண்டும் உட்பட பல்வேறு அறிவுரைகளை இன்றைய பூத்த பூர்ணிமா நாளில் பின்பற்ற வேண்டும் என உறுதி மொழி எடுப்போம் என தெரிவித்தார். இறுதியாக அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டு புத்த பூர்ணிமா விழா நிறைவு பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...