மேட்டுப்பாளையத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி

மழைக்காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்றும் முறை, ஆபத்து காலங்களில் மக்களை மீட்கும் முறை, சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என்பதை கணித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கோவைக்கு அண்மையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



அதன்படி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், துணை ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஆனைமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மே.23 மழைக்காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்றும் முறை மற்றும் ஆபத்து காலங்களில் மக்களை மீட்கும் முறை, சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது, போக்குவரத்தை சீர் செய்வது, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்பது உட்பட பல்வேறு ஒத்திகை பயிற்சிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...