உடுமலையில் நாராயண கவிராயரின் 43 -வது நினைவு நாள் கடைபிடிப்பு

உடுமலைப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு உடுமலை நாராயணகவியின் பெயர் வைக்க வேண்டும் என்று உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியைச் சேர்ந்த உடுமலை நாராயண கவிராயர் ஏறத்தாழ 40 ஆண்டு காலம் நாடக உலகிலும், திரைத்துறையிலும் தனது பகுத்தறிவு பாடல்களாலும், தேசபக்தி பாடல்களாலும் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருந்தார்.

இவரின் 43 வது நினைவு நாள் உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் சார்பில், உடுமலை நாராயணகவிராயர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பேரவையின் சார்பாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடுமலைப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு உடுமலை நாராயணகவியின் பெயர் வைத்திட தமிழக அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்வது, உடுமலை நாராயணகவியின் பிறந்தநாளை அரசு சார்பில் கொண்டாடுவது போல, நினைவு நாளையும் அரசு சார்பில் அனுசரிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது,உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கு, புதிய நூல்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுவதால், குடிமைப் பயிற்சி நூல்கள் உட்பட புதிய நூல்களை மணிமண்டப நூலகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.பேரவையின் 30-வது ஆண்டு நிறைவு விழாவை ஜூலையில் விமரிசையாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.



இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் உடுமலை நாராயணகவியின் பேரன் திருப்பூர் வழக்கறிஞர் சுந்தரராசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பேரவையின் தலைவர் அமிர்தநேயன் அனைவரையும் வரவேற்று, தீர்மானங்களை வாசித்தார்.

இந்நிகழ்வில் இலக்கியப் பேரவை உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கொங்கு மண்டல ஆய்வு மையத்தின் நிர்வாகி எழுத்தாளர் உடுமலை ரவி, பாவலரேறு தேன்தமிழ்ப் பாசறை நிர்வாகி கொழுமம் ஆதி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் நடராஜன், மளிகைசெல்வம் என்கின்ற ஜி.செல்வராஜ், பேரவையின் புரவலர் பா.விக்னேஷ், மாணவர்கள் எழில் குமரன், ஜெயமகேஸ்வரி, பவித்ரா, வேலுமணி, மணிமண்டப நூலகர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பேரவையின் துணைத்தலைவர் ஆசிரியர் செல்லத்துரை நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...