தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

முன் விரோதம் காரணமாக தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் குறித்து தேவையற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலராக இருந்தவர் கிருஷ்ணசாமி. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தொழிலதிபர் சி.கே.கண்ணன் என்பவர் இந்து அறநிலைய துறையில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கிருஷ்ணசாமி அறங்காவலர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தொழிலதிபர் சி.கே.கண்ணன் தவறான புகார் அளித்ததோடு, வீண்வதந்தி பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.



தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் வானுகன் கூறும் போது, கடந்த 1995 ல் இருந்து அறங்காவலராக இருந்து வந்த கிருஷ்ணசாமி பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதே போல மதுக்கரை பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக தேவையற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் சி.கே.கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...