பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு அனுமதி அளித்துள்ளார். நாளை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும், 6 மணி நேரத்துக்கு ஒருமுறை வழக்கறிஞர்களை அவர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென மனு அளித்திருந்தனர்.

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் இரண்டாவது நபராக பெலிக்ஸ் ஜெரால்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று (மே.23) திருச்சியில் இருந்து அழைத்துவரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் ஆஜர் செய்யப்பட்டார்.

நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு மனு ஏற்கப்பட்டது. பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நாளை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும், 6 மணி நேரத்துக்கு ஒருமுறை வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...