தொட்டபெட்டா செல்ல இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

பாஸ்டேக் சோதனைச் சாவடியை மாற்றியமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்ததால் இன்று முதல் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.



நீலகிரி : நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு மே 16 முதல் 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்டேக் சோதனைச் சாவடியை மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால் மே.22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பாஸ்டேக் சோதனைச் சாவடியை மாற்றியமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்ததால் இன்று (மே.23) முதல் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...