விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஒன்று திரண்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை சிவானந்தா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக கோவையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் இன்று சிவானாந்தா காலனி பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தும் தமிழக அமைச்சர்கள் ஏன் விவசாயிகளின் கோரிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தாக்கப்பட்ட போது உடனடியாக அறவழிப் போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் விவசாயிகளின் அறவழிப்போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய மாணவர்களும், இளைஞர்களும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...