பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பில், தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் நுண் பார்வையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.



தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது.



தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் நுண் பார்வையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு வாக்கு எண்ணும் தினத்தன்று அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா அளித்த பேட்டியின் போது, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி ஒருசுற்றுக்கு 14 டேபிள்கள் என மொத்தம் 84 டேபிள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் 335 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட பயிற்சியானது இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று கட்ட பயிற்சி அலுவலர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் அலுவலர்கள், மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் செல்போன்கள் கொண்டு வர அனுமதி இல்லை.

பத்திரிக்கையாளர்களுக்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், 8.30 மணி அளவில் வாக்குப் பெட்டி இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும்பணியும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...