ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி மலர் - வால்பாறையில் மக்கள் பார்த்து வியப்பு

வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் பாபு என்பவரது வீட்டில் நேற்றிரவு நிஷா காந்தி பூ பூத்தது. நறுமணத்துடன் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துக்குலுங்கின. இந்த அழகிய காட்சியை அருகில் உள்ளவர்களும் வந்து பார்த்து ரசித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் குடியிருந்து வரும் பாபு என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகாந்தி பூ இரவில் பூத்துக் குலுங்கியது. பாபு என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நிஷா காந்தி செடியை வளர்த்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் விஷாகாந்தி பூ பூக்கும் என்பதை கேள்விப்பட்டு தங்கள் வீட்டில் நிஷா காந்தி பூ பூக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.



இந்த நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் அழகான நறுமணத்துடன் பூ பூத்தது. முதலில் ஒரு சில பூக்கள் மெல்ல மெல்ல பூக்க துவங்கியது. பின் சுமார் 30ற்கு மேற்பட்ட பூக்கள் செடியில் பூத்துக் குலுங்கியது. இந்த பூ மிகவும் அழகாக தூய வெள்ளை நிறத்தில் உள்ளது.

நிஷாகந்திப் பூ இரவில் மலர்ந்து அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே வாடிவிடும் தன்மை உடையது. இந்த வகை பூக்கள் இமயமலை பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

மேலும் இந்த பூ இலைகள் மருத்துவ குணம் உடையது. இந்த இந்த நிஷா காந்தி பூ வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் பூத்து குலுங்கியது வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களும் இந்தப் பூக்களை பார்த்து ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...