கோவையில் சிறுதுளி அமைப்பு சார்பில் வேளாண்மையில் நீர் பாதுகாப்பு கையாள்வது தொடர்பான கூட்டம்

சிறுதுளி அமைப்பு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டனர். நிலையான வேளாண்மை மற்றும் பண்ணைகளில் அதிகப்படியான நீர் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து கூட்டத்தில் விவசாயிகள் கலந்துரையாடினர்.


கோவை: மே 24, 2024 இன்று "துளி துளியாய் சிறுதுளியாய்" என்ற 75 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வேளாண்மையில் நீர் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதற்கான கூட்டத்தை சிறுதுளி நடத்தியது. இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள 150 விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கலந்து கொண்டன.

பல்வேறு விவசாய சமூகங்களுக்கிடையே கலந்துரையாடலை இந்தக் கூட்டம் நடத்தியது. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும், நீர் பாதுகாப்பு கலந்து ஆலோசிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.யு. பாலசுப்பிரமணியன், சிறுதுளி உச்ச அமைப்பு உறுப்பினர்களான பிரபுராம், எஸ்.ஜெ. பாலகிருஷ்ணன், மருதாச்சலம் மற்றும் ஷாந்தினி பாலு ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.



நிலையான வேளாண்மை மற்றும் பண்ணைகளில் அதிகப்படியான நீர் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து கலந்துரையாடலை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். கூட்டத்தின் போது, நிலையான மற்றும் கவனமுள்ள நீர் பயன்பாட்டிற்கு தங்கள் வேளாண்மை நடைமுறைகளில் விவசாயிகள் ஒன்றுபட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



நீரைப் பாதுகாக்கும், கழிவுகளை குறைக்கும் மற்றும் மழைநீர் சேகரிப்பு முறைகளை மேம்படுத்தும் முறைகளை அமல்படுத்துவதாக அவர்கள் உறுதியளித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளும், சங்கங்களும், தங்கள் வேளாண்மை நிலங்களிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ள நீர்த் தேக்கங்களிலும் மண் அகற்ற வேண்டும் என்று சிறுதுளியிடம் கோரிக்கை வைத்தனர். இதன் மூலம் நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் வேளாண்மையில் நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...