ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - நீதிபதி உத்தரவு

கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.


கோவை: பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வழக்கில் மற்றொரு நபராக ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று மாலையுடன் விசாரணை முடிந்த பிறகு அவரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வருகின்ற 31 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...