கோவை மாநகராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பெர்க்ஸ் பள்ளி நுழைவு வாயில் அருகில் அமைந்துள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் லங்கா கார்னர் பகுதியில், மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலை பெர்க்ஸ் பள்ளி நுழைவு வாயில் அருகில் அமைந்துள்ள வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (24.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட லங்கா கார்னர் பகுதியில், மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (24.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



உடன் மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...