கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டின் கேட்டில் தலையை மாட்டிய நாய் பத்திரமாக மீட்பு

வண்ணார் கோவில் பகுதியில், வீட்டின் கேட்டில் தலையை மாட்டிக்கொண்டு போராடிய நாயை, அதன் கழுத்து பகுதியில் எண்ணெய்யை ஊற்றி தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணார் கோவில் பகுதியில் வீட்டின் கேட்டில் தலை சிக்கி போராடிக்கொண்டிருந்த நாயை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் அரை மணி நேரம் போராடி கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி லாவகமாக மீட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணார் கோவில் என்ற இடத்தில் வீட்டின் கேட் ஒன்றில் நாய் ஒன்று தலை உள்ளே விட்டு மாட்டியிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினருக்கு தகவல் வந்துள்ளது.



சம்பவ இடத்திற்குச் சென்ற நிலைய அலுவலர் கார்த்திகேஷன், சுரேஷ் குமார் மற்றும் சதீஷ் கண்ணன், வேல்முருகன், மோகன்ராஜ் ஆகியோர் நாயின் கண்களை துணி கொண்டு கட்டி, கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி அரை மணி நேரம் போராடி லாவகமாக மீட்டனர்.



அந்த நாயை மீட்கும் போது அருகே அதனுடைய நண்பன் நாய் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...