பொள்ளாச்சியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நான்கு பேர் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், இவரது நண்பர்கள் பிரதீப் குமார், விஜயராகவன், பரமன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி தேர் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் சபரீஷ் குமார். இவர் வீட்டின் முன்பு கடந்த 19ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் பதிவான காட்சியை வைத்து சபரீஷ் குமார் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.



இந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தை திருடிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், இவரது நண்பர்கள் பிரதீப் குமார், விஜயராகவன், பரமன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...