உடுமலை அருகே சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆய்வு

தமிழக எல்லைப்பகுதியில் கேரள அரசு சார்பில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டபடுவதால் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன பகுதியும், குடிநீர் தட்டுபாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.



இந்த நிலையில் மாநில தலைமை அறிவுறுத்தல் படி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுக்கா வட்டவடா ஊராட்சி பகுதியில் உள்ள சிலந்தை ஆற்றில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் பலர் சென்று ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...