உடுமலையில் மேற்கூரையில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

இறகு பந்து விளையாடும் விளையாட்டு அரங்கம் உள்ள மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அப்போது, கூடாரத்தின் மேற்கூரையில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டான். இந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் சாலையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் மின்வாரிய அலுவலர்கள் பயன்படுத்தும் இறகு பந்து விளையாடும் விளையாட்டு அரங்கம் உள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அதில் ஒருவர் அடித்த பந்து இறகு பந்து கூடாரத்துக்கு மேலே உள்ள சிமெண்ட் சீட்டில் விழுந்தது. இதனை எடுப்பதற்காக பிரபு என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் அந்த கட்டிடத்தின் மீது ஏறி உள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் மேல் புறத்தில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில்பட்டு உடல் முழுவதும் தீ விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்து அலறி உள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு உள்ளனர்.

அந்த சத்தத்தை கேட்ட மின்வாரிய ஊழியர்கள் சிலர் உடனடியாக வந்து அந்த கட்டிடத்தின் மேலே ஏறி அந்த சிறுவனை மீட்டனர். உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து ஆடைகள் தீயில் எரிந்து நாசமானது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவனை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறுவன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிசிக்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து உடுமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடுமலையில் கிரிக்கெட்பந்தை எடுக்க சென்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...