கோவை சாய்பாபா காலனியில் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய தந்தை கைது

கோவை சாய்பாபா காலனியில், மதுபோதையில் தனது குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய பச்சையன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பச்சையன் (39), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆா்த்தி. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், பச்சையன் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு சென்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால், ஆா்த்தி அவரைப் பிரிந்து மதுரையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாா். குழந்தை பச்சையனுடன் இருந்தது. 

இந்நிலையில், வியாழக்கிழமை ஆா்த்தியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய பச்சையன், கோவை வருமாறு அவரை அழைத்துள்ளாா். அதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பச்சையன், நீ வரவில்லை என்றால் குழந்தையைக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதில், பயந்துபோன ஆா்த்தி, சாய்பாபா காலனியில் வசிக்கும் தனது பெரியம்மாவிடம் விவரத்தை கூறி நேரில் சென்று குழந்தையை மீட்குமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து, ஆா்த்தியின் பெரியம்மா பொன்னி (50) சிலரை அழைத்துக் கொண்டு பச்சையன் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த குழந்தையை மீட்டாா். இது குறித்து பொன்னி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிந்து பச்சையனைக் மே.24 கைது செய்தனா்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...