கொங்கு மண்டலத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அடுத்த ஒருவாரம் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை குறித்தும், வரவுள்ள பருவமழை குறித்தும் அண்மையில் கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று (25.4.2024) முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும். கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஆங்காங்கே மிதமான வெப்ப சலனம் மழைக்கு அடுத்த ஒரு வாரம் வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது என்று இந்த மாத இறுதியில் அறிவித்தாலும் உண்மையில் மழை அடுத்த 10 நாட்களுக்கு அவ்வளவாக இருக்காது. இதற்குக் காரணம் எம் ஜே ஓ வங்கக் கடலிலிருந்து பசிபிக் கடலை நோக்கி நகர்வதால் இந்திய நிலப்பரப்பில் மழையின் தாக்கம் குறைவாக காணப்படும்.

இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து விடும் என்று நம்ப வேண்டாம். சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...