உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் இலவச தடகள பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால தடகள இலவச பயிற்சி முகாமில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை உடற்கல்வித்துறை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது


திருப்பூர்: திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் மே1ம் தேதி முதல் நடைபெற்றது.

இந்த தடகள பயிற்சி முகாமின் இறுதி நாளான இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எஸ்.கே.கல்யாணி மற்றும் திருப்பூர் தடகள சங்க தலைவர் ஆர்.பி.ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் முத்துக்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தடகள சங்க துணை செயலாளர் மற்றும் ஐ வின் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் அழகேசன், திருப்பூர் தடகள சங்க தொழில்நுட்ப குழு உறுப்பினர் சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். லயன்ஸ் கிளப் சேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்லூரி முன்னாள் மாணவர் செந்தில், அவதார் கிரிக்கெட் கிளப் பர்வீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். உடுமலைப்பேட்டையில் தடகள ஆர்வலர்கள், நடைபயிற்சியாளர் சங்க உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், கல்லூரி முன்னாள் மாணவர்கள், கல்லூரி தடகள வீரர்கள் கலந்து கொண்டனர்.



130க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.



மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கோடைகால தடகள இலவச பயிற்சி முகாம் திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை உடற்கல்வித்துறை சார்பாக நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...