கோவையில் எட்டு அடி நீளமுள்ள சாரை பாம்புடன் பெண் இருக்கும் வீடியோ வைரல்

மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம். பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்த உமா மகேஸ்வரி என்ற பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை கணபதியை சேர்ந்த உமா மகேஸ்வரி சிறுவயதில் இருந்து குடியிருப்பு பகுதியில் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.

முன்னதாக பாம்பை வைத்து அவர் மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மே.25 வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...