பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டியில் தொகுப்பு வீடுகளின் அவல நிலை: உயிருக்கு பயந்து வாழும் மக்கள்

பொள்ளாச்சி புளியங்கண்டி பகுதியில் 30 ஆண்டுக் காலம் விடியாத தொகுப்பு வீடுகளில் மலைவாழ் மக்கள் உயிருக்கு பயந்து வாழ்கின்றனர். இடிந்து விழும் கான்கிரீட் கம்பிகள் மற்றும் விரிசல் பாதிக்கப்பட்ட வீடுகளில் அவல நிலை.


கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் மலையடிவாரத்தில் அமைந்துள்ள புளியங்கண்டி பகுதியில் பாரம்பரியமாக 40க்கும் மேற்பட்ட இரவாளர் இன பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.

கூலித் தொழில் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வரும் இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொகுப்பு வீடுகள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து இடிந்து விழுந்து வருவதால் குடியிருக்க முடியாமல் குடும்பத்துடன் உயிருக்கு பயந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பருவ மலையின் போது பெரும்பாலான குடும்பங்கள் அருகில் உள்ள பள்ளி கட்டிடம் அல்லது அங்கன்வாடி கட்டிடத்தில் தங்க வைக்கும் சம்பவங்களும், அரங்கேறி வருகிறது.



இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் முறையாக அரசு பராமரிப்பு செய்யவில்லை தற்போது வீடுகள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இரவு நேரங்களில் குடும்பத்துடன் நிம்மதியாக உறங்க முடியவில்லை ஆங்காங்கே பெயர்ந்து காணப்படும் சிமெண்ட் மேற்கூரை திட்டுகள் விழுந்து காயம் ஏற்படுவதோடு இரவு நேரங்களில் வெளியில உறங்க நினைத்தாலும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் வருவதால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர் எனவே அச்சத்துடன் வாழ்ந்து வரும் எங்களது நிலைமையை அறிந்து அரசு வீடுகளை பராமரிப்பு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...