சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோட்டில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, இரண்டு பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (வயது 44). இவர் கடந்த 18-ந் தேதி உடுமலைப்பேட்டை அருகே உள்ள அவரது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றிந்தார். 

பின்னர் அவர் மே.24 மாலை 4 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உள்ளே சென்று பார்த்தார். 

அப்போது அங்கு பீரோவில் இருந்த தங்க செயின் மற்றும் மோதிரம் என 2 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. 

பின்னர் இது குறித்து ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் மே.24 சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...