மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு

மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் வனத்துறையினர் யானைகளின் கணக்கெடுப்பு பணியை மூன்று நாட்களாக நடத்திவருகின்றனர். கணக்கெடுப்பில் யானைகளின் நடமாட்டம் மற்றும் நீர்நிலைகளில் அவற்றின் தொகை குறித்து தகவல் சேகரிக்கப்படுகிறது.


கோவை: கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளின் வலசைப் பாதையாகவும் மேட்டுப்பாளையம் வனப்பகுதி விளங்கி வருகிறது.

தற்போது வனப்பகுதியில் யானைகள் இடம்பெயர்ந்து செல்வது அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.



அதன்படி மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளிலும், சிறுமுகை வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வனபாதுகாவலர்கள் 6 குழுக்களாக பிரிந்து ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக் குட்டை,உலியூர் ஆகிய பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் யானைகளின் நடமாட்டம் குறித்து நேரிடையாகவும், இரண்டாவது நாளான 24 ஆம்தேதி நேர்கோட்டில் வனப்பகுதியில் இடது மற்றும் வலது புறம் யானைகளின் சாணம் சிறுநீர் மற்றும் கால் தடயங்களை வைத்தும் யானைகள் கணக்கெடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர். 



மூன்றாவது நாளான நேற்று (மே.25) வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள் ஆகிய நீர்நிலைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் கணக்கெடுக்கும் பணி தினசரி காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...