கோவை குண்டுவெடிப்பு கைதி அபுதாஹீர் கைது

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அபுதாஹீர், தலைமறைவாக இருந்து உக்கடம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் சி.பி.சி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர் (45). இவர் கோவை குண்டுவெடிப்பில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தவர். இந்நிலையில் வெளியே வந்த பின்பு அவர் பணம் மோசடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இவர் மீது காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ போலீசார் அபுதாஹீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அபுதாஹீருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை அறிந்ததும் அபுதாஹீர் தலைமறைவானார். 

அவரை சி.பி.சி.ஐபோலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் உக்கடம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அபுதாஹீரை சி.பி.சி.ஐ போலீசார் மே.23 கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...