புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்

கோவையில் உள்ள புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் நடைபெற்ற விளையாட்டு, கலை போட்டிகளில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் சிறுவா், சிறுமியா் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றம் முன்னாள் முதல்வா் காமராஜரால் கடந்த 1963-ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. இங்கு கல்வி கற்றவா்களில் பலா் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த சிறுவா், சிறுமியா் மன்றத்தில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் மே.25 நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணைய வாரிய உறுப்பினா் செயலா் மற்றும் ஐ.ஜி. ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள், கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...