உடுமலை அருகே அமராவதி அணையில் தடுப்பணை கட்ட கடும் எதிர்ப்பு - 200 பேர் கைது

உடுமலை அருகே அமராவதி அணையில் தடுப்பணை கட்ட கேரளா அரசுக்கு எதிர்ப்பு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டம் நடத்தி 200 பேர் கைது. துரைமுருகன் பதவி நீக்க போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் 110 குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை ஒன்று கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.



இதற்கிடையில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு எனவே கேரளா அரசு உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதணை சுவாடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக கேரளா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர்.

விவசாயிகள் கூறியதாவது

அமராவதி அணை முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்சமயம் தமிழகத்தில் அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரளா அரசு தற்பொழுது வரை எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு 5 மாதத்திற்கு முன்பே சிலந்தை மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தகவல் தெரிந்தும் அலட்சியமாக இருந்த காரணத்தால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தடுப்பணை கட்டும் இடத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...