கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அக்கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நேற்று மே.26 நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜீ.ஆர்.சாமிநாதனை பணி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், அவர் முன்பு இருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்தும் அவர்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கி வருவதாக கூறினார்.

மேலும் சவுக்கு சங்கர் வழக்கில் நியாத்திற்கு விரோதமாக தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்த அவர் ஜி.ஆர்.சாமிநாதனை அவர் வகிக்கும் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...