கோவையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி - மாநகராட்சி ஆணையாளர் தொடக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி ஹவுசிங்யூனிட் அருகில் பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (27.05.2024) துவக்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து அவர் பேசியாதவது, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 10123 வகைகளான மரங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழ்வின்போது, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...