கோவை கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மழைநீர் வடிகால், குடிநீர் திட்டப் பணி, சாலை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-54 காமராஜர் சாலை இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் மத்திய பெரும் நிதி (CGF) திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் சுமார் 2.2 கி.மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும்,



மசக்காளிபாளையம் சாலை, லால் பகதூர் நகர், லட்சுமிபுரம் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24x7 குடிநீர் திட்டப் பணிகளையும் மற்றும்



பீளமேடு வார்டு எண்-24 தண்ணீர் பந்தல் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைக்கும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி வாகனம் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையாளர் கவிதா, மாநகர துணை பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...