கோவை எம்ஜிஆர் மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவு – ஒரு கிலோ தக்காளி ரூ.55 விற்பனை

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தை பொருத்தவரை தொண்டாமுத்தூர், நரசிபுரம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தக்காளி விளைவிக்கப்படுகிறது.

கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு தினமும் 200 டன் முதல் 250 டன் வரை தக்காளி வந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது 120 டன் அளவிற்கு தக்காளி வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூபாய் 1,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோவையில் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.55-க்கு விற்பனையாகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...