கோவை ஆர்.ஜி.நகரில் தொழிற்சாலை உரிமையாளர் தற்கொலை

துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிற்சாலை உரிமையாளர் ரவீந்திரன் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை, ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பா நகர், ஆர் ஜி.நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (43). இவர் துடைப்பம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, தொழிற்சாலையை மூடிவிட்டு துபாய்க்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்தார். இந்நிலையில் நேற்று மே.26 மாலை வீட்டில் ரவீந்திரன் எலியை ஒழிக்க பயன்படும் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீஜா, உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

பின்னர் இது குறித்து ஸ்ரீஜா ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...