துடியலூர் அருகே ஆட்டுக்குட்டியை மீட்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த நபர் பத்திரமாக மீட்பு

தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகர் பகுதியில் 100 அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க சென்ற கார்த்தி என்பவரும் கிணற்றில் தவறி விழுந்தார். கார்த்தியை பத்திரமாக மீட்டு தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆட்டுக்குட்டியையும் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகர் பகுதியில் வீட்டுக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கச் சென்ற கார்த்தி என்பவர் 100 ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியவரை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. அவருக்கு வயது 42,நேற்று மாலை அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று 100 அடி ஆழமுள்ள வீட்டு கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை மீட்பதற்காக கார்த்தி கிணற்றுக்குள் இறங்கியபோது அவரும் கிணற்றில் விழுந்துள்ளார்.



இந்த தகவல் அறிந்துவந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், நிலைய அலுவலர் கார்த்திகேசன், சுரேஷ்குமார்,சதீஷ் கண்ணன் வேல்முருகன் மோகன்ராஜ் உள்ளிட்ட துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கார்த்திக்கை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆட்டுக்குட்டியையும் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...